2 மாவட்டங்களுக்கு 3ம் எண் புயல் கூண்டு

3782

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதி தீவிரமடைந்து வருவதால், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நிவர் புயலால் ஏற்படக்கூடும் மோசமான வானிலையால், மீன்வர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை குறிக்கும் வகையில் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, நாகை காரைக்காலில் கடல் சீற்றம் துவங்கி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்களின் படகுகள் அனைத்தும் துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பாக கயிறு கட்டி நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement