நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை

284
edappadi-palanisamy

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒப்பந்த விவகாரத்தில் வழக்கை சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. 47 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

புதிய தலைமை செயலக விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்த தி.மு.க., தற்போது வழக்கு விசாரணைக்கு தடை கோரியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தம் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்த அவர், ஒப்பந்த விவகாரத்தில் வழக்கை சந்திக்க தயார் என்றும் கூறினார்.