கைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..

6422

முன்னுரை:-

உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக இருக்கும் நபர்களே, பல்வேறு சமயங்களில் வாகனங்களை இயக்கும்போது, தடுமாறுவதுண்டு. ஆனால், ஒரு பெண் இரண்டு கைகளும் இல்லாமல், பைலட்டாகி இருக்கிறார். இதுதொடர்பான சிறப்புத் தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

சிறுவயது வாழ்க்கை:-

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பகுதியில் 31 வருடங்களுக்கு முன்பு, ஒரு தம்பதிக்கு ஜெசிக்கா காக்ஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது.

பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த ஜெசிக்கா, சிறு வயது முதலே, கராத்தே பயிற்சி, பியானோ வாசித்தல், கார் ஓட்டுவது, பிறரை ஊக்குவித்தல் போன்று பல்வேறு விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். இவரது இளம்வயதிலேயே விமான ஓட்டுவது தொடர்பான ஆர்வம் அதிகமானது.

தனது பட்டப்படிப்பை முடித்த ஜெசிக்கா, விமானம் இயக்கும் பயிற்சி பள்ளிகளில் பயின்று, 3 வருட விடா முயற்சியின் மூலம் பைலட்டாக மாறினார்.

ஜெசிக்காவின் முதல் விமான பயணம்:-

ஜெசிக்காவின் முதல் பயணம் அவ்வளவு எளிமையாக இல்லை. அவர் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி செய்யும்போது, அவரது பெற்றோர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்துக்கொண்டே இருப்பார்களாம்.

நீண்ட நாட்களாக, விமானம் ஓட்டுவதற்கு காத்திருந்த நிலையில்,  அந்த ஒரு சம்பவம் அவரது மொத்த வாழ்க்கையையே மாற்றியது. ஒரு நாள் விமானம் ஒன்றை இயக்குவதற்கு இரண்டு பைலட்டுகள் தேவைப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ஒரு பைலட் மட்டுமே இருந்துள்ளார்.

திடீரென, அந்த பைலட், ஜெசிக்காவை பைலட்டுகளின் இருக்கையில் அமர வைத்தார். அன்றிலிருந்த ஜெசிக்க பறக்கத் தொடங்கிவிட்டால்.

ஜெசிக்காவின் வாழ்க்கை:-

எனது இந்த வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில், பெரும் ஆக்கப்பூர்வ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஊனமுற்றோரின் வாழ்க்கையில்.

என்னுடைய சிறுவயதில் நான் பல்வேறு நபர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறேன். வரும் தலைமுறையினருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பேன் என தனது வாழ்க்கையை ஜெசிக்கா வாழ்ந்து வருகிறார்.

முடிவுரை:-

இவர் பைலட்டாக மாறியது குறித்து அனைவருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரது பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழலாம். ஆனால், பல்வேறு தடைகளை தகர்தெறிந்து சாதனையாளராக ஜெசிக்கா மாறியிருக்கிறார். இவர் பல்வேறு பெண்கள், ஊனமுற்றோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக எப்போதும் இருப்பார்.