மாணவர்கள் ஆப்பி அண்ணாச்சி! முதல்வரின் அட்டகாசமான ஆர்டர்!

969

ஆந்திரா மாநிலத்தில் கடந்த மாதம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அபார வெற்றி பெற்றார். மேலும், கடந்த மாதம் 30- ஆம் தேதி அன்று அம்மாநில முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

இவர் பதவியில் அமர்ந்ததில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு சனிக்கிழமையும், படிப்பு அல்லாத பிற திறன்கள், விளையாட்டுக்காக மட்டுமே மாணவர்கள் செலவழிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார் முதல்வர்.

அதுமட்டுமில்லை, மாணவர்களின் புத்தகப் பையின் எடையைகூட கூடிய சீக்கிரம் குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறாராம். இதெல்லாம் எதற்காக என்றால், மதிப்பெண்கள் பின்னாடியே மாணவர்கள் ஓடுகிறார்கள் என்பதால்தான்.

எப்பவுமே தோளில் புத்தக மூட்டையுடன் சுமந்து வரும் மாணவர்கள், முதல்வரின் இந்த அறிவிப்பை கேட்டதும் ஒரே குஷியாகிவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of