“மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்..” ஐகோர்ட் அதிரடி..

356

தமிழகத்தில் நிலவும் மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று மணல் கடத்தல். சமீபகாலமாக மணல் மாபியாக்களின், கடத்தல் வேலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுவதால், நிலத்தடி நீர் மட்டமும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது.

எனவே, அந்த வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என அதிரடியாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.