“அசாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது” – அசாம் முதல்வர் உறுதி

2584

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என போராட்டம் டெல்லி,மும்பை, ஹரியானா,அசாம், உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அசாமில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை, தடியடி நடத்தி போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் செல்போன் இன்டர்நெட் மற்றும் பிராட்பேண்ட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

அசாமில் தற்போது போராட்டங்கள் சற்று ஓய்ந்த நிலையில், 10 நாட்ளுக்கு பிறகு செல்போன் இன்டர்நெட் சேவைகள் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி உள்ளன. பிராட்பேண்ட் சேவை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்நிலையில் அசாம் பாஜக முதல் மந்திரி சர்பானந்த சோனோவல் கூறியதாவது:-

அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நமது மொழிக்கோ நமது அடையாளத்திற்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. எந்த வகையிலும் அசாமின் கவுரவம் பாதிக்கப்படாது.

மக்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் இருக்கிறது. மக்கள் ஆதரவுடன், அமைதியான வழியில் முன்னேற்றப் பாதையில் செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of