தடையின்றி சேவை தொடரும். – ஏர் இந்தியா.

562
air-india-27.2.19

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று இந்திய விமான படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமில் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் தற்போது நமது விமானப்படை வீரர் ஒருவரை பாக் ராணுவம் கைது செய்துள்ளதாக பாக். தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பதற்றமான சூழ்நிலையில் நாட்டில் உள்ள அணைத்து விமானநிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன. பல விமானநிலையங்கள் தற்காலிகமாக மூடவும்பட்டது.

தற்போது ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு டெல்லி வழியாக செல்லும் தங்களது விமானங்கள் அணைத்தும் அகமதாபாத் மற்றும் மும்பை மார்க்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து, இந்தியா வரும் விமானங்கள் துபாய் மற்றும் ஷார்ஜாஹ்விற்கு மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் அவை சற்று தாமதத்துடன் தரை இறங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தங்களது எந்த விமானங்களும் ரத்துசெய்யப்படவில்லை, விமான பயண நேரம் மட்டுமே கூடுதலாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement