டிசம்பர் வரை சாத்தியமில்லை.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..

868

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி – கல்லூரிகளை திறப்பதற்கு சாத்தியமில்லை என்று மத்திய கல்வி அமைச்சக நிலைக்குழுவின் ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் நிலைக்குழு ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், துறையின் செயலாளர் அமித் கரே மற்றும் பல்வேறு மாநிலங்களின் கல்வித்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் – கல்லூரிகளை திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வைரஸ்தொற்று இன்னும் குறையாத நிலையில், பள்ளி – கல்லூரிகளை மீண்டும் திறந்தால் பாதிப்பு அதிகமாகும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனால் வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி – கல்லூரிகளை திறப்பதற்கு இயலாத சூழ்நிலை நிலவுகிறது என்று கல்வித்துறை செயலாளர் அமித்கரே தெரிவித்தார்.

ஆனால், கல்லூரிகளின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை நிலைக்குழு கூட்டத்தி்ல் முடிவு எடுக்கப்பட்டது.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்த வழக்கு விசாரணையின் முடிவு மற்றும் வைரஸ்தொற்றின் பாதிப்பு ஆகியற்றிற்கேற்ப பள்ளி – கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கலாம் என கல்வித்துறை நிலைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement