மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை – சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர்

480

மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை DMS – வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுவது குறித்து மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படுவதாக தெரிவித்தார். ரயில் நேர காலதாமதம் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவித்த அவர், பயணிகளின் பாதுகாப்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்றார். 2020-ஆம் ஆண்டிற்குள் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மெட்ரோ ரயில் பயணிகள் கட்டணம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பங்கஜ்குமார் பன்சால், கட்டணம் குறைக்க வாய்ப்பில்லை என்றும் ரயில் நிலையங்களில் வைஃபை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.