நாமக்கல்லில் கொரோனா பாதிப்பு இல்லை – புரளிக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த ஆட்சியர்

290

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு இல்லை என்றும், கோழி முட்டை வழியாக நோய் பரவுகிறது என்ற வாட்ஸ் அப் தகவல் பொய்யானது என்றும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியரிடம், கோழி முட்டை மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஆட்சியர், இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of