பாக்., எல்லைக்குள் நடத்திய தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை – மத்திய அமைச்சர் திடீர் பல்டி

1186

பாகிஸ்தான் எல்லைக்கு சென்று தாங்கள் யாரையும் கொல்லவில்லையென மத்திய அமைச்சர் அலுவாலியா திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார்.

ss ahluvaliya
புல்வாமா தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்போகிறோம் என கூறி பாகிஸ்தான் எல்லைக்கு சென்று இந்திய இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இதில் 200 லிருந்து 300 பேர் வரை பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி ஆதாரங்களை கேட்டனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இந்த தாக்குதலுக்கான ஆதாரங்களை சமர்பிக்கவேண்டும் என்றும், இது பாஜக-வால் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடத்தப்படும் அப்பட்டமான நாடகம் என்றும் கடுமையாக சாடினார்.

இந்த சந்தேகங்களுக்கு ஏற்றார்போல் மத்திய அமைச்சர் அலுவாலியா செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை எனவும், அப்படி உயிரிழந்ததாக பிரதமர் மோடியும் கூறவில்லை. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா சென்று தாக்குதல் நடத்த முடியும் என எச்சரிக்கை விடுப்பதற்காகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறினார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of