நிவாரண முகாம்களில் மின் இணைப்பு இல்லாததால் மக்கள் அவதி

283

நாகையில் நிவாரண முகாம்களிலும் மின் இணைப்பு இல்லாததால் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நகர்புறங்களில் மின்விநியோகம் சீரடைந்தாலும், கிராமப்புறங்களில் மின்விநியோம் சீரடைய மேலும் சில நாட்களாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் பன்னாள் கிராமத்தில் நிவாரண முகாமாக செயல்பட்டு வரும், அரசு பள்ளியிலும் மின்சாரம் இல்லாதால், பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். விஷ பூச்சிகள், பாம்புகள் அதிக அளவில் உள்ளதால் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், அல்லது இரவில் மட்டும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.