குப்பைத்தொட்டி தேவைப்படாத ஆண்டிப்பட்டி! பேரூராட்சி கையாண்ட புதிய யுக்தி!

755

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியின் 18 வார்டுகளில் மொத்தம் 9 ஆயிரத்து 452 வீடுகள் உள்ளன. சுமார் 35 ஆயிரம் பேர் வசித்து வரும் இந்த பகுதியில், தினமும் 8.67 டன் குப்பைகள் உருவாகின்றன.

இவ்வளவு குப்பைகளையும் சேகரிக்க ஆண்டிபட்டியில் ஒரு குப்பைத் தொட்டி கூட இல்லை என்பதால், பேரூராட்சி சுகாதாரப்பிரிவு சிறப்பு திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளது. அது என்னவென்றால், இங்குள்ள 57 குப்பை வண்டிகள் காலை முதலே வார்டுகளின் பல பகுதிகளுக்குச் செல்லும்.

ஏற்கெனவே வீடுகளில் மக்கும், மக்காத குப்பைகளை வைக்க வாளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வெளியில் கொட்டக்கூடாது என்று பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் துப்புரவுப் பணியாளர்களின் விசில் சப்தம் கேட்டதும் பொதுமக்கள் குப்பைகளை அவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

இவ்வாறு 18 வார்டுகளும் முழுமைப்படுத்தப்படுகின்றன. இந்தக் குப்பைகள் அனைத்தும் எடை போடப்பட்டு மக்கும், மக்காத, இதர குப்பைகள் என்று தனித்தனியே பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கும், மண்புழு உரம் தயாரிக்கவும் வகைப்படுத்தப்படுகிறது.

குப்பைகளை வீதிகளில் உள்ள தொட்டிகளிலும், திறந்தவெளியிலும் கொட்டி வருபவர்களுக்கு மத்தியில் ஆண்டிபட்டி மக்களின் குப்பை அகற்றும் நேர்த்தி பலரிடையே பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of