அச்சுறுத்தி எங்களை பணியவைக்க முடியாது .

220
paksitan-8.3.19

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவீத் பஜ்வா இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார். அக்கூட்டத்தில் அவர் பேசியபோது.

அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் என்ற பாதையில் பாகிஸ்தான் சென்று கொண்டிருக்கிறது. படைகளை பயன்படுத்தியோ அல்லது படைகளை பயன்படுத்துவதாக அச்சுறுத்தியோ தங்களை யாரும் பணிய வைக்க முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தரும்வகையில், தங்கள் படைகள் எப்போதும் உஷாராகவும், விழிப்புடனும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.