எப்போது நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன்.., தமிழிசை

638

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பதவி பசி காரணமாக பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார் என தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த முக. ஸ்டாலின், நான் பாஜக-விடம் பேசியதை அவர்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுகின்றேன், முடியவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தமிழிசை தயாரா என கேள்வி எழுப்பினார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,

எப்போது வேண்டுமானாலும் நிரூபிப்பேன், அரசியலில் எந்த நேரத்தில் நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன்.

மு.க. ஸ்டாலின் சொல்கிறார் என்பதற்காக இன்றைக்கே நிரூபிக்க வேண்டியதில்லை. பொய் சொல்லாத, ஊழல் செய்யாத, நேர்மையான அரசியலே எனது அரசியல் பாரம்பரியம். என்னுடைய அரசியல் வாழ்க்கை என்றும் நேர்மையானது தான். பாஜகவுடன் தி.மு.க. பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன்.

என்னை அரசியலை விட்டு விலகச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசியது என நான் கூறியது உண்மை தான்.

நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது. மு.க.ஸ்டாலின் அரசியலில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை மு.க. ஸ்டாலின் நிரூபிக்கட்டும் என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of