திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது | Vijayakanth

331

மர்ம நபர்களால் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதோடு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of