பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை

622

பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் செடம்பர் 6ஆம் தேதியை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினமாக பாகிஸ்தான் அரசு கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் இம்ரான் கான், வரும் காலங்களில் பிற நாடுகளில் நடக்கும் போரில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்காது என்றார்.

தான் ஆரம்பம் முதலே போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாரட்டத்தக்கது என்றார்.

பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை என்று தெரிவித்தார். போரினால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாகவும் இம்ரான் கான் கூறினார்.

Advertisement