கட்டணமின்றி நிவாரண பொருட்களை அனுப்பலாம் ? – ரயில்வே நிர்வாகம்

254

‘பானி’ புயலால் பாதித்த ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ரெயிலில் நிவாரண பொருட்கள் கட்டணமின்றி கொண்டுசெல்லப்படும்.

மாநிலங்களுக்குள்ளேயோ, வேறு ஒரு மாநிலத்தில் இருந்தோ இந்த பொருட்களை பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்களில் கொண்டுசெல்லலாம். ஆனால் அனுப்புபவர் அல்லது பெறுபவர் மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட கமிஷனராக இருக்க வேண்டும்.

அதேபோல தேவைக்கேற்ப கூடுதல் ரெயில் பெட்டிகள் மற்றும் கூடுதல் சரக்கு பெட்டிகள் சேர்ப்பது குறித்து அந்தந்த கோட்ட ரெயில்வே மேலாளரே முடிவு எடுக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.