“NRC-யை அமல்படுத்த தற்போது வரை திட்டம் இல்லை” – மத்திய உள்துறை அமைச்சகம்

702

என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் தயாரிக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்த நிலையில், நாடு முழுவதும் என்.ஆர்.சி-யை அமல்படுத்த திட்டம் இல்லை என பிரதமர் மோடி உள்பட பல பாஜக மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் விளக்கம் அளித்தனர்.

இந்தநிலையில், என்.ஆர்.சி தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யாந்த் ராய், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது தொடர்பாக இதுவரை முடிவு செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.