நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

122

நாடாளுமன்ற வளாகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களை ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று நாடாளுமன்ற செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் மறு சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள், மற்ற பிளாஸ்டிக் பொருள்களும் பயன்படுத்தக் கூடாது என  கூறப்பட்டுள்ளது.

சுற்றுக் சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த முயற்சி, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின்படி மேற்கொள்ளப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of