ஆடுகளத்தை சரியாக கணிக்காததே தோல்விக்கு காரணம் – டோனி

486

ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-1 சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சேப்பாக்கத்தில் ஏழு லீக் ஆட்டங்களில் ஆறு முறை டாஸ் வென்ற அணிகள் பீல்டிங்கையே தேர்வு செய்தன. இதனால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பையின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் 131 ரன்களே சேர்த்தனர். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்விக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த டோனி, ஆடுகளத்தை இன்னும் சிறப்பாக கணித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement