வனிதாவே எதிர்பார்க்காத டுவிஸ்ட்! வனிதாவுக்காக டுவிட்டரில் புலம்பும் ரசிகர்கள்!

830

கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி அன்று பிக்-பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த 16 பேரில் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதாவும் ஒருவர்.

இவர் பிக்-பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே, பலரிடம் வீண் வம்பு இழுத்து வருகிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மூத்த போட்டியாளர்களான சேரன், மோகன், சரவணன் உள்ளிட்டவர்களும், வனிதாவை எதிர்த்து பேசாமல் அமைதியாக சென்று வருகின்றனர்.

இதனால் கடும் கோபத்துடன் இருந்து வந்த நோயர்கள், இவர் எப்போது எலிமினேசன் லிஸ்டில் வருவார் என்றும், அவருக்கு ஓட்டு போடாமல் பிக்-பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தனர். இதனிடையே இன்றைய வாரத்தில் வனிதா விஜயகுமார், எலிமினேசன் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் பிக்-பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த பிக்-பாஸ் ரசிகர்கள், திடீரென அந்தர் பல்டி அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

அது என்னவென்றால், பிக்-பாஸ் வீட்டை விட்டு வனிதா சென்றுவிட்டால், நிகழ்ச்சி மிகவும் போரடிக்கும்படியாக மாறிவிடும் என்று புலம்பி வருகின்றனர். வனிதாவுக்கு பதில் மோகன் வைத்தியாவை வீட்டிற்கு அனுப்புங்கள் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement