2018-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

576

ஓஸ்லோ: உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, அறிவியலாளர் ஆல்ஃபிரெட் நோபல் நினைவாக 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

முதலில் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் என 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், 1969 ஆம்
ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தை கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரப்பிரிவு சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அக்டோபர் 8-ம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ள நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, போரின் போது நிகழும் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்காக காங்கோவைச் சேர்ந்த பெண்களுக்கான மருத்துவர் டெனிஸ் முக்வேஜா என்பவருக்கும், ஈராக் நாட்டைச் சேர்ந்த குர்து மனித உரிமை ஆர்வலர் நாடியா முராத் என்பவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.