2018-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

372

ஸ்டோக்ஹோம்: உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, அறிவியலாளர் ஆல்ஃபிரெட் நோபல் நினைவாக 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

முதலில் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் என 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், 1969 ஆம்
ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தை கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரப்பிரிவு சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அக்டோபர் 8-ம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ள நிலையில், இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு
ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புற்றுநோய்க்கான மருத்துவ கண்டுபிடிப்பிற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோவுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இருவருக்கும் நோபல் பதக்கம் மற்றும் தலா 4 கோடி ரூபாய் வழங்கப்படும்.