2018-ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு

1627

ஸ்டோக்ஹோம்: உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, அறிவியலாளர் ஆல்ஃபிரெட் நோபல் நினைவாக 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

முதலில் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் என 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், 1969 ஆம்
ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தை கொண்டு நோபல் பரிசு பட்டியலில் பொருளாதாரப்பிரிவு சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அக்டோபர் 8-ம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ள நிலையில், இன்று வேதியலுக்கான நோபல் பரிசு
ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மனித குலத்துக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்தற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஃப்ரான்சஸ் ஹெச் அர்னால்டு மற்றும் ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனைச் சேர்ந்த சர் கிரேகொரி பி.வின்டர் ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சுற்றுசூழலுக்கு உகந்த வேதியியில் பொருட்களை கண்டுபிடித்ததற்காக மூன்று பேரையும் நோபல் கமிட்டி பாராட்டியுள்ளது.