வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

255

வேதியியலுக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மருத்துவத்துறை மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இன்று (அக்., 09),வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.2019ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜான் பி. குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்காம், அகிரா யோஷினா ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

எடைக் குறைவான லித்தியம்-அயன் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சியில் புதிய வளர்ச்சியை எட்டியதற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of