திருநங்கைகளுக்கு செய்யப்பட்ட சிறப்பு..! மாற்றப்பட்ட மெட்ரோ ரயில் நிலையம்..!

1259

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் செக்டர் 50 என்ற மெட்ரோ ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தின் மூலம், நொய்டாவில் இருந்து கிரேட்டர் நொய்டா வரை பயணிக்க முடியும்.

இந்நிலையில், நொய்டாவின் மெட்ரோ ரயில் கழகம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செக்டர் 50 ரயில் நிலையத்தின் பெயர், பிரைட் ஸ்டேஷன் என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ரயில் நிலையத்தில் உள்ள 6 பணியிடங்களிலும், திருநங்கைகள் மட்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு வடஇந்தியாவில் முதன்முறையாக இதுபோன்ற சிறப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement