அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை – பொதுமக்கள் கண்ணீருடன் வேதனை

452

கஜா புயலால் சின்னாப்பின்னமான கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களான கேசிபட்டி, குப்பம்மாட்டி போன்ற மலை கிராமங்கள் கஜா புயலினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளும், விலை நிலங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன.

குழந்தைகளுக்கு உணவு, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புயலால் பாதிப்புகள் ஏற்பட்டு மூன்று நாட்களாகியும் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விகுறி ஆகிவிட்டது என்று மக்கள் கதறுகின்றனர்.

அடுத்த வேலை சோற்றிற்கு என்ன செய்வது என்று தெரியாமல், குழந்தைகளை வைத்து அப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர்.