பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் –  சென்னை மாநகராட்சி .

2860

அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே இன்று நள்ளிரவு முதல் கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் அதீத கனமழையும், சில பகுதிகளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை, எண்ணூர் விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும், வீட்டு மாடியில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துமாறும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement