“பைக்க நிறுத்துங்க..” கதறிய பெண்.. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்..

1737

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் கணவனை பிரிந்து, கோவையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருப்பூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறியதை அடுத்து, அப்பெண், கடந்த 28ஆம் தேதி திருப்பூர் சென்றுள்ளார்.

ஆனால், எங்கு கேட்டும் வேலை கிடைக்காததால், மீண்டும் கோவைக்கு செல்ல முடிவெடுத்த அப்பெண், தன்னை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிடுமாறு கூறியுள்ளார். அப்போது, ராஜேஷ்குமார் தனது தம்பி ராஜூவுடன் செல்லுமாறு கூறியதை அடுத்து, அவருடன் சென்றுள்ளார்.

ஆனால், ராஜூ பேருந்து நிறுத்தம் செல்லாமல் பாறைக்குழி என்ற இடத்திற்கு கூட்டி சென்று, தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. மேலும், அப்பெண்ணிடம் இருந்து செல்ஃபோன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, அப்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார், ராஜூ, அன்பு, கவின் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தமிழ், தாமோதரன், ராஜேஷ்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.