அமெரிக்க அதிபரை சந்திக்க விரும்புவதாக வட கொரியா அதிபர் கடிதம்

658

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் பொருளாதார தடைகளை சந்தித்தது.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது.

அதில், அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் உன், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்நிலையில், மீண்டும் சந்திக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அலுவலகத்திற்கு வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement