Exclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்” டிராமா…

791

சென்னை,வட பழனியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் என்பது அனைவரும் அறிந்தது.

கோவில் நிலங்களை பாதுகாக்கவேண்டுமென்று ஒரு புறம் இந்து அமைப்புக்களும் மற்றொரு புறம்  நீதிமன்றமும் அறிவுறுத்திக்கொண்டே தான் இருக்கிறது.. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளூர் அரசியல் வாதிகளோடு கரம் கோர்த்துக்கொண்டு பல்வேறு தில்லாலங்கடி வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டே தான் உள்ளனர்..

அப்படியொரு மோசடியில் தான் சென்னை சென்னை,வட பழனி கோவில் நிர்வாகம் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது.

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 10- வது மண்டலம்,130 -வது கோட்டத்திற்குட்பட்ட அழகிரி நகர் பிராதன சாலையில் உள்ள சர்வே எண்; 60 க்குட்பட்ட நிலத்தில் 2000 ஆயிரம் சதுர அடி நிலம் குத்தகை அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு 22 நிபந்தனைகளின் அடிப்படையில் 01-04-2013 முதல் 31-03-2015 வரை குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் 01-04-2015 முதல் இரண்டு வருடங்களுக்கு 10 வது மண்டல அலுவலகம் சார்பில் குத்தகை நீட்டிப்பு செய்ய கடிதம் கொடுக்கப்படுகிறது.

(சென்னை மாநகராட்சின் நில உடமைத்துறையின்  தீர்மான நகல் ஆதாரம் — படம் 1)

சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் மோசடியே இங்கு தான் அரங்கேறுகிறது.

அதாவது,அறநிலையத்துறை  குத்தகைக்கு வழங்கிய இடம் அழகிரிநகர் பிராதன சாலை.. ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகம் கட்டிய இடமோ நெற்குன்றம் பாதையில்…… அழகிரி நகர் பிராதான சாலையில் கட்டவில்லை

இதோ அதற்கான RTI ஆதாரம்…

குத்தகைக்கு வாங்காத இடத்தில்,அறநிலையத்துறையின் எந்த அனுமதியும் இல்லாமல் 10-வது மண்டல அதிகாரிகள்  அம்மா உணவக கட்டிடத்தை கட்டிவிட்டனர்.

அதற்காக,,,நெற்குன்றம் பாதையில் அம்மா உணவகத்தின் முதல் தளம் கட்டுவதற்காக 15.44 லட்சமும்,அதே கட்டிடத்தில் முதல் தளம்  பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு 20.59 லட்சமும் செலவிடப்பட்டுள்ளளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக 15-11-19 அன்று பெறப்பட்ட பதில்களில் சொல்லப்பட்டுள்ளது.

இதோ… அதற்கான  RTI  ஆதாரம்…

ஆனால்…

அதே மாநகராட்சி 25-9-2019 அன்று அம்மா உணவகம்  மட்டும் கட்டுவதற்கு

2016-17 ஆண்டில் 49 லட்சத்து 54 ஆயிரத்து 554 ரூபாயும், 2017-18 ம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 459 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது…

அதாவது அம்மா உணவக கட்டிடம் கட்டத்தொடங்கியதில் இருந்து அதற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 53 லட்சத்து 35 ஆயிரத்து 13 ரூபாய்….

இதோ… அதற்கான  RTI  ஆதாரம்…

அதே போல, கோவிலுக்கு சொந்தமான அழகிரிநகர் முதல் தெருவில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவரது தகப்பனார் பழக்கடை ஜெயராமன் நினைவு அறக்கட்டளை மூலமாக,அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று 15 லட்சம் மதிப்பீட்டில் மூன்று நியாவிலைக்கடைகள் கட்டப்பட்டுள்ளது…

அதற்கான கல்வெட்டு ஆதாரம்…

ஆனால் அதே இடத்தில் 7 லட்சத்து 82 ஆயிரம் செலவு செய்து நியாவிலைக்கடைகள் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியில் செலவு செய்திருப்பதாக மோசடிக்கணக்கு கணக்கு எழுதப்பட்டுள்ளது.

அதற்கான  RTI  ஆதாரம்…

அந்த நியாய விலைக்கட்டிடத்தின் மீது 20 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது…

அறநிலையத்துறையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது..

சென்னை மாநகராட்சியும்,அறநிலையத்துறையும் இரண்டும் அரசுத்துறைகள் தானே அனுமதி இல்லாமல் கட்டினால் என்ன தவறு என்று கூட உங்களுக்கு தோன்றலாம்…

130 வது கோட்டத்திற்குட்பட்ட அழகிரி நகர் முதல் தெருவில் உள்ள நியாய விலைக்கட்டிடத்தின் ஒரு பல்நோக்கு கட்டிடமும், நெற்குன்றம் பாதையில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அம்மா உணவக கட்டிடத்தின் மீது ஒரு பல்நோக்கு கட்டிடமும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியில் கட்டப்பட்டுள்ளது..

பல்நோக்கு கட்டிடத்தின் செலவினங்களுக்காக 2016-17 ஆண்டு 2 லட்சத்து 85 ஆயிரத்து 960 ரூபாயும், 2017-18 ஆண்டு 7 லட்சத்து 82 ஆயிரத்து 57 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது..

ஆனால் பல்நோக்கு கட்டிடத்தின் கல்வெட்டில் நெற்குன்றம் சாலையில் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும்,,அழகிரி நகர் முதல் தெருவில் உள்ள பல்நோக்கு கட்டிடம் 23 லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கூறுகிறது…

படம் ஆதாரம்…

உண்மையில் இப்படியொரு பல்நோக்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை..

RTI ஆதாரம் …

இடியாப்ப சிக்கலைப்போல ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு,அந்த தவறை மறைக்க மற்றொரு தவறு என்பதைப்போல…

நெற்குன்றம் பாதையில் உள்ள அம்மா உணவகம் கட்டியதில் அநியாயத்திற்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்..

2016-ம் ஆண்டு தரைத்தளம் மற்றும் முதல் தளத்திற்கு திட்டம் வகுத்து அம்மா உணவக கட்டிடம் மற்றும் கோட்ட அலுவலகம் கட்டுவதற்காக   49 லட்சத்து 54544 ருபாய் செலவிடப்பட்டுள்ளது.ஆனால் தரைதளத்தோடு செலவுக்கணக்கை எழுதிய சென்னை மாநகராட்சியின் 10-வது மண்டல அதிகாரிகள்… மேல் தளத்தையே காட்டாமல் பணத்தை வாயில் போட்டுக்கொண்டனர்.

அதே கட்டிடத்திற்காக 2017-18 ம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரத்து 459 ருபாய் செலவு செய்துள்ளனர். ஆக மொத்தம்    கட்டிடத்திற்கு 53 லட்சத்து 35 ஆயிரத்து 13 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மெகா மோசடியை மறைக்க அம்மா உணவக கட்டிடத்தின் முதல் தளத்திற்கு  23 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும் செலவு செய்து பல்நோக்கு கட்டிடம் என பெயர் வைத்து அப்பட்டமான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்…

34 பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அறநிலை துறைக்கு கொடுத்து விட்டு சென்னை மாநகராட்சி 10 வது மண்டல அதிகாரிகள் அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் ஆக்ரமித்து அம்மா உணவகம் கட்டியுள்ள நெற்குன்றம் பாதையில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பரிமாற்றம் செய்துகொள்ள வட பழனி கோவில் நிர்வாக அதிகாரிகள் அப்பட்டமான மோசடிக்கு துணை போகின்றனர்..

பணியாண்டவர் கோவில் தெருவில் இருந்த  வணிக வளாக  கட்டிடம், பாழடைந்தகாரணத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்டது.

அங்கு வாடகைக்கு இருந்தவர்களுக்கு மீண்டும் கடை கட்டித்தரப்படும் என நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதை எல்லாம் மறைத்து நிலத்தை மாநகராட்சியும்,அறநிலையத்துறையும் பரிவர்த்தனை  அடிப்படையில் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்…

இந்த முறைகேடுகளை மறைக்க, வட பழனி முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள வடக்கு மாட வீதியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைத்து உதவுவது போல நாடகம் நடத்தி வருகின்றனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்……

கோவிலைச்சுற்றி பல இடங்கள் இருந்தாலும், 40 அடி அகலமுள்ள சாலையில் . 18 அடியை  எடுத்து அதில் பார்க்கிங்க் அமைத்து அதிகப்படுத்தும் விஷயத்தை உள்நோக்கத்தோடு   பூதாகாரப்படுத்தி வருகின்றனர் அறநிலையத்துறை அதிகாரிகள்..

 

சத்தமில்லாமல் ஒரு பெரும் மோசடியை மறைக்க சாலையின் குறுக்கே தான் பார்க்கிங் கட்டுவோம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அடம் பிடிப்பதன் உள்நோக்கம் அறியாமல் கோவில் நிர்வாகம் உதவி வருகிறதென வருத்தம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்..

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்கு பதிலாக,,சென்னை மாநகராட்சி அதிகாரிகளின், மோசடிகளை மறைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் உதவலாமா ? கொஞ்சமாவது அறமோடு நடங்கப்பா….