வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விட அதிக அளவில் பெய்யும்

114
northeast monsoon

வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விட அதிக அளவில் பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம்,மற்றும் புதுச்சேரியில் தென்தமிழகம், தெற்கு கேரளா, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு கேரளா மற்றும் இதர பகுதிகளான ராயல்சீமா, தெற்கு கர்நாடக பகுதியிலும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

நடப்பாண்டில் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என கூறிய பாலச்சந்திரன், இலங்கை முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பரவி உள்ளது என்றும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது வலிமைபெற்று தென்தமிழக பகுதிகளில் நிலவுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரிருமுறை இடைவெளிவிட்டு மழை பெய்யும் எனவும் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் புழலில் 11 சென்டி மீட்டர் மழையும், கேளம்பாக்கத்தில் 10 சென்டி மீட்டரும், பெரியநாயக்கன்பாளையம், பெருந்துறையில் தலா 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாவும் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here