வரும் 20ஆம் தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை மையம்

439

வரும் 20ஆம் தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கேரளா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா கடற்கடை பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of