இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – வடமாகாண சபை

740

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் இலங்கை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை வடக்கு மாகாண சபையின் 131வது அமர்வு நேற்று கூடியது. இதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை முழுமையாக அமல்படுத்தாத இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், தமிழர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும், இயல்பு நிலை திரும்பும் வரை இலங்கை மீது ராணுவ தடை விதிக்க வேண்டும், வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement