‘மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது’.., பிரியங்கா சர்மா அதிரடி

525

சில நாட்களுக்கு முன்பு பாஜக பெண் பிரமுகர் பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்களா முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. அந்த நிபந்தனையில் ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர்.

இந்நிலையில், மார்பிங் செய்யப்பட்ட மம்தா புகைப்படத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என பிரியங்கா சர்மா கூறியுள்ளார். ஜாமீனில் வெளிவந்த பிரியங்கா சர்மா பேசுகையில், “நான் வருத்தம் தெரிவிக்கப்போவது கிடையாது.

நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்த ஒரு தவறும் செய்யவில்லை. ஜெயிலில் மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டேன். என்னை ஒரு கிரிமினல் போன்று நடத்தினார்கள். ஜெயிலில் மிகவும் துன்புறுத்தப்பட்டேன்” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of