வெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh

372

ராகுல் ப்ரீத் சிங், தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், தமிழில் அதிக படங்களில் நடிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, ‘எல்லா மொழிகளிலும் அதிக படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த சில படங்கள் சரியாக ஓடவில்லை.

எனவே, கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைக்கவில்லை. ஓரளவு இடைவெளி விட்டு புதுப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்தேன். ஓய்வு எடுப்பதற்கே நேரம் கிடைக்கவில்லை. இனி எல்லா வாய்ப்புகளையும் ஏற்க மாட்டேன்.

எனக்கு மிகவும் பிடித்த கதையும், கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். வெறுமனே டூயட் பாடல் காட்சியில் ஆடிவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of