ஏன் தேர்தல் பயிற்சிக்கு வரவில்லை? – விளக்கம் கேட்டு நோட்டீஸ்

243

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி பயிற்சிக்கு வராத ஆயிரத்து 233 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தலுக்காக 690 இடங்களில் ஆயிரத்து 553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 7 ஆயிரத்து 557 அரசு ஊழியர்களை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இவர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்ட பயிற்சி கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் இந்த பயிற்சியில் ஆயிரத்து 233 அரசு ஊழியர்கள் பங்கேற்காததால், அவர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of