கருணாஸ் உட்பட 4 எம்எல்ஏ.க்களுக்கு நோட்டீஸ் – தனபால்

852

கருணாஸ் உட்பட 4 எம்எல்ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் மற்றும் அரசு குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது, ஐ.பி.எல். போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற கருணாஸ் கடந்த வாரம் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் முதல்வர் குறித்து அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்  அதிமுக சட்டமன்ற கொரடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் கருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தகுதி இழப்பு சட்ட விதி 6ன் படி சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement