1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் செவ்வாய் கிரக மண்

262

புளோரிடா: அமெரிக்காவிலுள்ள மத்திய புளோரிடா பல்கலைகழக விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக மண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தி, அதுபோலவே சிவப்பு நிற மண்ணை தயாரித்துள்ளனர். செவ்வாய் கிரக மண்ணிலிருக்கும் வேதிப்பொருட்களை வைத்தே, இந்த மணலை உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் எந்த வித்தியாசமுமின்றி தயாரித்துள்ளனர். தற்போது இந்த மணல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த மணலை வைத்து நமக்கு தேவையான ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். விதை போட்டு செடி வளர்க்கலாம். யாரேனும் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவே இந்த மணலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மணல் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சியால், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திலும் உணவுக்கு தேவையான வழிமுறைகளை கண்டறிய உதவியாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இந்த மணல் கிலோ ஒன்றிற்கு 20 டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.1500 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.