கர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! அரசு அதிரடி..!

1413

பெண்களுக்கான முக்கியமான பருவங்களில் ஒன்று தாய்மை அடைதல். ஒவ்வொரு பெண்களுக்கும் பிரசவம் என்பது மறுபிறவி என்றே சொல்லலாம். இவ்வாறு மிகவும் முக்கியமான இந்த தருணத்தில், பெண்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.

இதன் காரணமாகவே, அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பகால விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த விடுமுறை பெரும்பாலும் தனியார் நிறுவனங்களில் அளிப்பது இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரள அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான அறிவிப்பை வெளியிட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம் என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, கேரளாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கும், 26 வார சம்பளத்துடன்கூடிய பேறுகால விடுமுறை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement