மீண்டும் அணு ஆயுதப் போர் – எச்சரிக்கும் இம்ரான் கான்

326

காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அணு ஆயுதப் போர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐ.நா பொது சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து உலகத்தின் மத்தியில் எடுத்துரைப்பேன் என்றார். பத்தாண்டுகளாக தீவிரமடைந்து வந்த காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளதுள்ளதாக கூறினார்.

இந்த பிரச்சனை போரை நோக்கி சென்றால், இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருப்பது நினைவில் இருக்கட்டும் என்றார். அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றியாளராக இருக்க முடியாது என்றும், இதில் வல்லரசு நாடுகளுக்கு முக்கிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.

வல்லரசு நாடுகள் தங்களை ஆதரித்தாலும், இல்லையென்றாலும், பாகிஸ்தான் ஒவ்வொரு எல்லைக்கும் செல்லும் என்று எச்சரித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of