உலக அளவில் 2018 ஆம் ஆண்டில் 53 ஊடகவியலாளர்கள் கொலை – அதிர்ச்சி தகவல்

81
2018-killed-reporters

உலக அளவில் 2018 ஆம் ஆண்டில் 53 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உலக பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து உலக பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலில், ஆப்கானிஸ்தான் நாட்டில் 13 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், சிரியாவில் 9 பேரும், இந்தியாவில் 5 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் மற்றும் அமெரிக்காவில் தலா 4 பேர்களும், ஆப்ரிக்கா மற்றும் ஏமனில் 3 பேர்களும், பிரேசில், கெலம்பியா, பாலஸ்தீனம், தலா 2 ஊடகவிலாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

லிபியா ,பாகிஸ்தான் ,சவுதி அரேபியா , சுலோவேகியா, சோமாலியா நிகரகுவா உள்ளிட்ட நாடுகளில் தலா ஒரு ஊடகவிலாளர்கள் என உலக முழுவதும் மொத்தம் 53 ஊடகவிலாளர்கள் சமூக விரோதிகளால் கொலை செய்யபட்டுள்ளதாக உலக பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கெளரி லங்கேஷ் உள்ளிட்ட ஊடகவிலாளர்கள் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்களை சமூக விரோதிகள் கொலை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here