குடி போதையில் பிரசவம் பார்த்த செவிலியர் – தலை வேறு, கால் வேறாக வந்த குழந்தை…

600
ராஜஸ்தான், அரசு சுகாதார மையத்தில் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் பிரசவத்தின் போது பணியில் இருந்த ஆண் செவிலியர் குழந்தையை வேகமா இழுத்துள்ளார். இதில் குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக வெளியில் வந்துள்ளது.
 
அதிர்ச்சியடைந்த செவிலியர் உடனே குழந்தையின் உடலை மறைத்து விட்டு, இன்னும் குழந்தை பிறக்கவில்லை என கூறி பிரசவத்தில் பிரச்சனை உள்ளது என கணவரிடம் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறும் கூறியுள்ளனர்.
 
பின் அந்த பெண் ஒரு அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு குழந்தையின் தலை மட்டும் உள்ளே இருப்பதை பார்த்த மருத்துவர்கள், பெண்ணின் உறவினர்களுக்கு தெரியப்படுத்திவிட்டு அறுவை சிகிச்சை செய்து தலையை வெளியில் எடுத்தனர்.
 
பின்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
விசாரணையில், அந்த செவிலியர் குடி போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் குழந்தையின் உடல்பகுதியையும் போலீசார் மீட்டெடுத்துள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.