6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள் போராட்டம்

631

காலமுறை ஊதியம், ஓய்வூதியம், நிலுவை தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி என பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

இதில் திரளான சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக வரும் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.