நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

632

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 157 ரன்னில் சுருண்டது.பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

10ஓவர் முடிந்த நிலையில் சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது.ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தியாவின் ஸ்கோர் 132 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்தியா 34.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களுடனும், அம்பதி ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

6 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார்.இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் வருகிற 26-ந்தேதி நடக்கும்

Advertisement