நியூசிலாந்து அணியை திணற வைத்த இந்தியா அணி.!

487

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.

 

முதல் போட்டி நேப்பியரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் குப்தில் 5 ரன்களிலும், கொலின் முன்ரோ 8 ரன்களிலும்  முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதேபோல், ரோஸ் டெய்லர் 24 ரன்களிலும், டும் லதம் 11 ரன்களிலும் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஹென்றி நிக்கோலஸ் விக்கெட்டை கெதார் ஜாதவ் வீழ்த்தினார். 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சண்ட்னெர், முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறியது.

அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டும்  அரைசதம் அடித்தார்.

38 ஓவர்களில் 157 ரன்களில் நியுசிலாந்து அணி அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. இதனை அடுத்து 158 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா விளையாடி வருகிறது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of