விசாரணை ஆணையத்தில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன்

486

 

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி ஆஜராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், 20-ஆம் தேதி ஆஜராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

பல்வேறு காரணங்களால் விசாரணை தள்ளிப்போன நிலையில் மீண்டும் ஆஜராக இருவருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் 21ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரும் 22-ஆம் தேதியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 23ஆம் தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of