கூவம் நதி சீரமைப்பு என்ன ஆனது..? ஸ்டாலினை விளாசிய ஓபிஎஸ்

398
சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அண்ணா கொள்கையை மறந்த கலைஞருக்கு பாடம் புகட்டுவதற்காகவே எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கியதாக கூறினார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விரைவில் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை தி.மு.க கொச்சைப்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர், ஸ்டாலின் 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது கூவம் நதியை சீரமைக்கப்போவதாக சொன்னது என்ன ஆனது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.