ஜல்லிக்கட்டுப் போட்டி! அனுமதி பெற்றுத் தந்தவர் மோடி! ஓ.பி.எஸ்.

377

விராலிமலை சோதனைச் சாவடியருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரையை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுக தான் காவிரி பிரச்னையிலும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது.

கடந்த 1972-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே 4 தடுப்பணைகள் கட்டப்பட்டன. தடுப்பணைகளால் தமிழகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது அப்போதைய திமுக அரசு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தால் காவிரி வாரியம் அமைக்கப்பட்டு காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது.

காளைகளைப் பட்டியலில் சேர்த்தது திமுக – காங்கிரஸ் அரசு. தமிழத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒரே நாளில் 5 துறைகளில் அனுமதி பெற்றுத் தந்தவர் பிரதமர் மோடி.”

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of